குக்கர் சின்னத்திற்கு கடும் போட்டி! தினகரனுக்கு சிக்கலா?

Last Modified புதன், 27 மார்ச் 2019 (07:55 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அந்த தொகுதியில் குக்கர் சின்னத்தை ஒருசில நாட்களில் பிரபலப்படுத்தினார். இதனால் தான் வரும் மக்களவை தேர்தலிலும் குக்கர் சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்குமாறு அவர் தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் அவருக்கு குக்கர் சின்னத்தை தர மறுத்தன
இந்த நிலையில் ஆர்.கே.நகரில் புகழ்பெற்ற குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றுவிட்டது. எனவே தமிழகத்தில் போட்டியிட்டுள்ள பல சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமமுக தொண்டர்களிடமும், பொதுமக்கள் மத்தியிலும் இன்னும் டிடிவி தினகரன் என்றாலே குக்கர் சின்னம் ஞாபகம் வரும் நிலையில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைகளுக்கு அமமுகவின் ஓட்டுக்கள் மாறி விழ வாய்ப்பு இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டியிடுவார் என்று கூறப்படுவதால் இந்த சிக்கலை தினகரன் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்இதில் மேலும் படிக்கவும் :