வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (15:19 IST)

தூத்துகுடி தொகுதியின் முக்கிய வேட்பாளர் வேட்புமனு வாபஸ்!

திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரியும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழியும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடுவதால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றது. அதுமட்டுமின்றி இரண்டு பிரபலமான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதும், இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி என்ற பேச்சும் அடிபடுகிறது
 
இந்த நிலையில் இந்த தொகுதியில் திடீரென போட்டியிட்டார் இயக்குனர் வ.கவுதமன். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கிய இயக்குனர் கவுதமன், அவரது கட்சியில் சார்பில் தான் ஒருவர் மட்டுமே போட்டியிடுவதாகவும், தூத்துகுடி தொகுதியை தான் தேர்வு செய்திருப்பதாகவும் அறிவித்தார். மேலும் கடைசி நேரத்தில் அவர் வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் தனது வேட்புமனுவை இயக்குனர் வ.கவுதமன் வாபஸ் பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தேர்தல் போட்டியில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் கவுதமன், 'தூத்துகுடி தொகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்பதால் வாபஸ் பெற்றதாக தெரிவித்தார்