ஆப்பிளா? மேங்கோவா? மீண்டும் கன்ஃப்யூஸனில் அதிமுக அமைச்சர்

Last Updated: திங்கள், 1 ஏப்ரல் 2019 (18:09 IST)
அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் பாமக சின்னத்தை ஆப்பிள் என கூறியது பிரச்சாரத்தின் போது சிரிப்பலையை ஏற்படுத்தியது. 
 
இன்று திண்டுக்கல் அனுமந்தபுரம் என்கிற இடத்தில் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு பிரச்சாரம் செய்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அபோது அவர் கூறியதவாது, 
 
வாக்காளர் பெருமக்களே பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்க, வேட்பாளர் அதிர்ச்சியில் பார்க்க, பின்னர் ஆப்பிள் இல்லை மாம்பழம் என திருத்திக்கொள்ள அங்கு ஒரே சிரிப்பலைதான். 
இதற்கு முன் கடந்த வாரம் ஆத்தூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் மக்கள் ஆப்பிள் சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து பின்னர் மாம்பழம் என்று திருத்திச் சொன்னார்.
 
இதற்கு முன்னர் பிரதமர் மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று அவர் உலறியதும் குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :