1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Muthulakshmi, Senthamarai joins in Velmurugan party

வேல்முருகன் கட்சியில் இரண்டு பிரபல பெண்கள்: பாமகவினர் அதிர்ச்சி

வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சியில் இரண்டு பிரபல பெண்கள் இணைந்துள்ளதை அடுத்து அவர்களை வைத்து அதிரடி பிரச்சாரம் செய்ய அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளதால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
பாமகவின் முக்கிய தலைவராக விளங்கிய காடுவெட்டி குரு சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு பாமகவினர் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை, நேற்று வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார்.
 
அதேபோல் சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார். இருவரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றாலும் பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
நேற்று நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுவில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரையும் இணைந்த விழாவில் பேசிய வேல்முருகன், 'நான் வாக்குறுதி தரமாட்டேன்; ஆனால் செய்ய வேண்டியதை செய்வேன். இருவர் மீது இனியும் ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொள்வது எனது கடமை' என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்
கேள்வி கேட்ட தொண்டரை வாயில் அடித்த செம்மலை: அன்புமணி பிரச்சாரத்தில் பரபரப்பு