பிரச்சாரத்தில் பல்பு வாங்கிய அன்புமணி: பாதியிலேயே எஸ்கேப்!!!

Last Modified திங்கள், 1 ஏப்ரல் 2019 (13:46 IST)
5 வருடமாக வராத நீங்கள் இப்பொழுது ஏன் வந்தீர்கள் என கேள்வி எழுப்பிய அதிமுக பிரமுகரை பாமகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ராமதாஸ் ஓலப்பட்டில் வாக்கு சேகரிப்பில் ஈட்டுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அதிமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார், அன்புமணியை முற்றுகையிட்டு 5 வருஷமா வராத நீங்கள் இப்பொழுது ஏன் இங்கே வந்தீர்கள்? சேலம் எட்டு வழி சாலைக்கு எதிரால்லாம் பேசுனீங்களே அய்யா? பதில் சொல்லுங்கள் அய்யா என வினாவினார்.
 
உடனடியாக அங்கிருந்த போலீஸார் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அங்கிருந்த பாமகவினர் செந்தில்குமாரை தாக்கினர். இதனால் அன்புமணி பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அதிமுக பாமக நிர்வாகிகள் மோதிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :