அழுகாச்சி அஸ்திரத்தை கையிலெடுத்த அன்புமணி: தருமபுரி கதறல்...

anbumani
Last Updated: வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:06 IST)
பாமக வேட்பாளர் அன்புமணி தேர்தல் பிரச்சாரத்தின் போது கதறி கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
101% அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிட கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி மக்களவைத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்துள்ளது. 
 
இது மக்களுக்கு மட்டுமின்றி சொந்த கட்சியினருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், ஒரு சிலர் கட்சியை விட்டு விலகிய நிலையில் தற்போது பாமக துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியுள்ளார்.
இந்நிலையில் தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அன்புமணி மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தருமபுரி மக்கள் என் மீது நிறைய பாசம் வைத்துள்ளனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உழைக்க கடமைப்பட்டிருக்கேன் என சொன்னவாறே கதறி அழுதார். உடனடியாக அங்கிருந்த மக்கள் ஐயா அழாதீங்க ஐயா என்று கத்தினார்கள். இதையடுத்து அவர் அழுகையை கட்டுப்பட்டுத்திக் கொண்டு மீண்டும் பேச்சை தொடங்கினார்.
 
இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தேர்தல் நெருங்குவதும் போதும், இந்த அரசியல்வாதிகளின் டிராமாக்களும் போதும்டா சாமி என கூறி வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :