1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 மார்ச் 2025 (08:07 IST)

ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்.. இந்தியாவுக்கு வருகிறது புதிய டெக்னாலஜி..!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிவேக இணைய சேவையை பெறுவதற்கான வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக செயல்பட்டு வரும் நிலையில், இணைய சேவையையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
 
இந்த ஒப்பந்தத்தின் மூலம், செயற்கைக்கோள்களின் உதவியால் இந்தியா முழுவதும், குறிப்பாக கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அதிவேக இணைய சேவை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இரு நிறுவனங்களுக்கிடையிலான இந்த ஒப்பந்தம், ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டது. இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மையம் மற்றும் மத்திய தொலைத்தொடர்பு துறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
 
இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், கிராமப்புறங்களிலும் அதிவேக இன்டர்நெட் கிடைக்கும். இதன் மூலம் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva