1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By c.anandakumar
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (18:47 IST)

சீட்டு வாங்குவது மட்டுமே ஜோதிமணியின் வேலை - காங்கிரஸ் கட்சியினர்

இந்திய அளவில் வரும் பாராளுமன்ற தேர்தல் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அளவில் கரூர் தொகுதி தான் மிகவும் பரபரப்பு எழுந்துள்ளது. 

அதிலும், மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும், கரெண்ட் சிட்டிங் எம்.பியுமான தம்பித்துரை, அ.தி.மு.க சார்பில் மீண்டும் களம் இறங்கிய நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் எந்த அனுபவமே இல்லாத அந்த கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் பி.எஸ்.என்.தங்கவேல், இது மட்டுமில்லாமல் தி.மு.க கூட்டணியில் தி.மு.க விற்கு சீட்டு கொடுக்காமல் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி இருப்பது தி.மு.க தொண்டர்களுக்கு அதிர்ப்தி ஏற்படுத்தியிருக்கின்றது.
 
இந்நிலையில், தற்போது, யாரை வேண்டுமானாலும், காங்கிரஸ் கட்சி நிறுத்தட்டும், ஆனால், செல்வி.ஜோதிமணியை நிறுத்தக்கூடாது என்று அக்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஏற்கனவே கரூர் சட்டமன்ற தொகுதியிலும், கரூர் மாவட்ட அளவில் தான் எதிர்ப்பு வந்தது.
 
தற்போது திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி அதாவது கரூர் பாராளுமன்ற தொகுதியில் மற்றுமொரு தொகுதி (கரூர், கிருஷ்ணராயபுரம் அரவக்குறிச்சி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் கரூர் மாவட்டத்தினை சார்ந்தவை, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி – திண்டுக்கல் மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதி – புதுக்கோட்டை மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி – திருச்சி மாவட்டம்) யிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
 
கரூர் மாவட்டத்தில் உள்ள, கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே எதிர்ப்பு கிளம்பிய ஜோதிமணிக்கு தற்போது திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செல்வி ஜோதிமணி அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதங்களில் கலந்து கொள்வதும், டிவிட்டர், பேஸ்புக்கில் மட்டும் தான் அரசியல் செய்வதாகவும், அவருக்கு எங்கேயும், மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்றும், நிச்சயம் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்றிருக்க, கரூர் தொகுதி நிச்சயமாக காங்கிரஸ் கட்சி கைப்பற்ற வேண்டுமானால், அதற்கு கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியானது செல்வி.ஜோதிமணிக்கு பதில் யாரை வேண்டுமானாலும் நிறுத்த வேண்டுமென்று அந்த கட்சியினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
 
கரூர் அடுத்த குஜிலியம்பாறை பகுதியில் அந்த பகுதியின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கரூர் தொகுதியினை தி.மு.க கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதற்கு வெடிவைத்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர், குஜிலியம்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் கட்சி தலைமை யாரை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும், பாடுபட தயார் என்றும் அதே நேரத்தில் ஜோதிமணியை மட்டும் அறிவிக்க கூடாது என்றும் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
இன்றுவரை அறிவிக்கபடாத வேட்பாளராக கருதப்படும் ஜோதிமணிக்கு அதுவும் பெண்மணி ஒருவருக்கு அனைத்து இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது தமிழக அளவில் மிகவும் பெரும் பரப்பரப்பினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.