தீபா பேரவையுடன் கூட்டணியா? டி.ராஜேந்தர் பேட்டி

VM| Last Updated: புதன், 20 மார்ச் 2019 (12:50 IST)
தீபா பேரவையுடன் நான் கூட்டணி அமைப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர்  தெரிவித்தார்.
தனக்கோ தன்னுடைய மகன் குறளரசனுக்கோ டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் எந்த கணக்கும் இல்லை என்று மறுத்த டிஆர், தங்களது பெயரில் போலியான கணக்கு உருவாக்கி தவறான செய்திகளை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்தார். தவறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்போவதாகவும் டி.ராஜேந்தர் ஆவேசமடைந்தார்.
 
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறிய ராஜேந்தர், அதற்கு காலஅவகாசம் இருப்பதாக கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :