வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (13:37 IST)

’அது இருந்தால்’ விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம் - சீமான்

அனைத்து கட்சிகளும் வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்காக மிகத்தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடலூர் மாவட்டம் வடலூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், க்காட்சியின் சார்பில் சிவஜோதி ஆகியோரை அறிமுகப்படுத்தி விவசாயி சின்னத்துக்கு வாக்குக் கேட்டார். 
அப்போது அவர் கூறியதாவது;
 
முன்னாள் முதல்வர் ஜெயலிதாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கருணாநிதிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் காவேரி மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். மாநிலத்தில்  உள்ள அரசு மருத்துவமனையை நம்மவில்லை. ஒருவேளை அவர்கள் இருவரும் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாட்களில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும். 
 
நாட்டின் முதல் குடிமகனுக்குக் கிடைத்த மருத்துவம் கடைக்கோடி மருத்துவனுக்கும் கிடைக்க வழிசெய்வோம்.  முதல் திட்டமாகா நீர்வள,ம் பெருக்க திட்டம் செயல்படுத்தப்படுவோம்.
 
முத்ல அமைச்சர் முதல், அரசு ஊழியர்கள் வரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்ற சட்டம்கொண்டு வரவேண்டும். லஞ்சமாக  ஒரு பைசா வாங்கினாலும் கூட விஷ ஊசி போட்டுக்கொல்லுவோம். இவ்வாறு பேசினார்.