ஜெயலிதாவிற்கும் கங்கனாவுக்கும் உள்ள ஒற்றுமை! இதனால் தான் விஜய் இவரை ஓகே பண்ணாரா?

Last Updated: செவ்வாய், 26 மார்ச் 2019 (12:54 IST)
ஜெயலலிதாவின் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒரே மாதிரியானது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 
 

 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வந்தனர் . பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டனர். 
 
ஆனால் கடைசியாக ஏ.எல் விஜய் இப்படத்தை இயக்க முடிவெடுத்து அறிவித்தார். இப்படத்தில் நடிகைகள் தேர்வு நெடுநாட்களாக பேசப்பட்டு வந்தநிலையில்,  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பதாக அவரது பிறந்தநாளன்று அறிவித்தனர்.
 
தற்போது இதுகுறித்து பேசியுள்ள கங்கனா, பிராந்திய மொழி படங்களில் நல்ல வாய்ப்பு வந்தால்  நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் தலைவி பட வாய்ப்பு வந்தது. என் கதையும் ஜெயலலிதாவின் கதையும் ஒரே மாதிரி தான் உள்ளது. சொல்லப் போனால் அவரின் கதை என்னுடையதை விட மிகவும் வெற்றிகரமானது.   
 
விஜய் கதை சொன்னபோது ஜெயலலிதாவிற்கும் என் வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருந்ததை உணர்ந்தேன். நான் என் வாழ்க்கை வரலாற்றை படமாக்க நினைத்த நேரத்தில் தலைவி வாய்ப்பு வந்தது. என் கதையா, அவர் கதையா என்று யோசித்தபோது ஜெயலலிதாவின் கதையில் நடிப்பது என்று முடிவு செய்தேன். 
 
ஜெயலலிதா - கங்கனாவின் வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதால் இப்படத்தில் அவரை நடிக்க வைக்கிறாரா விஜய்!


இதில் மேலும் படிக்கவும் :