வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (19:43 IST)

செம ஜாலியா பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி : சக ரவுடிகள் ஜே ஜே

போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஒளிந்து கொண்டிருந்த பிரபல ரவுடி பினுவை போலீஸார் கைது செய்தனர்.  கடந்த வருடம் இவனுடைய பிறந்தநாளுக்கு சென்னையில் உள்ள இடத்தில் மொத்த ரவுடிகள் ஒன்றாய்க்கூடி  கேக் வெட்டிக் கொண்டாடும் வேளையில் இவர்களை        போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதில் ஜாமீன் பெற்ற ரவுடி பினு பின்னர் தலைமறைவானான்.
இந்நிலையில் சமீபத்தில் காரில் வந்த பினுவைப் பிடித்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பிரபலமான ரவுடி ஜீசுவுக்கு நேற்று பிறந்த நாள்.இந்நிலையில் சக ரவுடிகள் அனைவரும் ஒன்றாய்கூடி மது அருந்தி கேக் வெட்டிக் கொண்டினர்.
 
இதில் கேக் வெட்டியது ,மெழுகுக் கத்தியில் அல்ல, ஆளை வெட்டும் நீளமான  பட்டாக் கத்தியில் கேக் வெட்டினான் ஜீசு.
இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பரவி வருகின்ற நிலையில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபதே மக்கள்அனைவரின் கோரிக்கையாகும்.