செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. பரபரப்பு சம்பவம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:45 IST)

மறுவாக்குப்பதிவு: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

மறு வாக்குப்பதிவு  நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
சென்னையில் உள்ள இரண்டு வார்டுகள் உள்பட மொத்தம் ஐந்து வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று 5 வார்டுகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இந்த மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்த வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 
 
5 வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நின்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் மறு வாக்குப்பதிவு  நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில்  வண்ணாரப்பேட்டை, பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு  நடைபெறும் இந்த  2 பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.