திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. பரபரப்பு சம்பவம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (13:03 IST)

3,678 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை - காவல்துறை தீவிர கண்காணிப்பு!

பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 
மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் இறுதிகட்ட ஏற்பாடுகளை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வாக்குப்பதிவு மையங்களில் நாளை நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்னணு எந்திரங்கள் அனைத்தும் இன்று காலையில் பலத்த பாதுகாப்புடன் மொத்தம் உள்ள 31,150 வாக்குப்பதிவு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. 
 
மாநிலம் முழுவதும் 3,678 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று 2 ஆயிரம் இடங்களில் பிரச்சினை ஏற்படலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,100 இடங்கள் பதட்டமானவை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.