"பூச்சாண்டி" பேயுடன் ரொமான்ஸ் பண்ணும் யோகிபாபு..!!

Papiksha Joseph| Last Modified செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:28 IST)

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல லாபத்தை கொடுத்ததால் அவரை வைத்து ஹீரோவாக படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் தற்ப்போது யோகிபாபு கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் ‘பூச்சாண்டி’ என்ற த்ரில்லர் காமெடி படத்தில் நடிக்கிறார்.
மிரட்டும் பெண் பேயாக அஞ்சலி நடிக்க யோகிபாபு பேய்க்கே காதல் ப்ரபோஸ் செய்து ரொமான்ஸில் மூழ்குகிறார். கேஎஸ் சினிஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ள யோகிபாபு மக்களே பேய்கள் முன்னேற்ற கழகத்தில் அட்மிஷன் ஆரம்பித்துள்ளது. அதற்கு சில நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் உள்ளன என்று கிண்டலாக பதிவிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :