திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (12:04 IST)

சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்… அனால் சினிமா இல்லை என்றால் செத்துவிடுவோம் – மிஷ்கின் பேச்சு!

பேய்மாமா படத்தின் இசைவெளியிட்டு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் சினிமா இல்லாவிட்டால் செத்து விடுவோம் என பேசியுள்ளார்.

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் பேய்மாமா. இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக மாளவிகா மேனனும் மற்ற கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார். அப்போது ‘லாக்டவுன் அறிவிக்கப்பட்ட 7 மாதங்களாக நாம் எல்லாருமே பேயாகத்தான் இருந்தோம். இப்போது தான் மனிதர்களாக உலாவ ஆரம்பித்துள்ளோம். இந்தப் படம் பெரியதாக வெற்றி பெற வேண்டும். சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் சினிமா இல்லாமல் வாழ முடியாது. செத்துப் போய் விடுவோம்’ எனக் கூறியுள்ளார்.