புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By papiksha
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (17:39 IST)

சக மனிதனை மதிக்கும் எந்த மனிதனும் "ஹீரோ" செகண்ட் சிங்கிள்!

நம்ம வீடு பிள்ளை வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
 
இவர்களுடன் பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற டிசம்பர் 20 ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்ண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ள இப்படத்தின் செக்கென்ட லுக் போஸ்டர் , டீசர் உள்ளிட்டவை சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். அதில் "சக மனிதனை மதிக்கும் எந்த மனிதனும் ஹீரோ" என்ற வாக்கியம் அடங்கியுள்ளது. எனவே இதுதான் இப்பாடலின் முதல் வரி என்பதை படக்குழு குறிப்பிட்டுள்ளனர்.