செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (22:18 IST)

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வந்த ’ஹீரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை, டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இந்த படத்தை வெளியிட ஏற்கனவே படக்குழு திட்டமிட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சற்று முன்னர் தனது டுவிட்டர் இணையதளத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் நாளை காலை 11 30 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் சிவகார்த்திகேயனின் இன்னொரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது