வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By papiksha
Last Updated : சனி, 29 பிப்ரவரி 2020 (19:05 IST)

நயன்தாராவின் பாதி லுக்கில் "மூக்குத்தி அம்மன்" பர்ஸ்ட் லுக்!

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த ’மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ஆர்ஜே பாலாஜி அதிகாரபூர்வமாக அறிவித்தார்
 
இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7:00 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் வேலுடன் இருக்கும் நயன்தாராவின் பத்தி மயமான புகைப்படத்துடன் நேற்று அறிவித்திருந்தார். 
 
இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்த மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் இயக்குனர் ஆர். ஜே பாலாஜி சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அம்மன் வேடத்தில் நயன்தாராவின் பாதி முகம் அடங்கிய இந்த பர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.