செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 29 பிப்ரவரி 2020 (13:02 IST)

நயன்தாராவின் உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா... இது ரொம்ப அநியாயம்!

தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான். 
 
ஹீரோக்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா பல முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 
 
இந்நிலையில் அப்போது சொல்ல வரும் தகவலென்வென்றால்  நயன்தாரா படப்பிடிப்பிற்கு வந்தால் 6 முதல் 7 உதவியாளர்களை அழைத்து வருவாராம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு மட்டும்  7 முதல் 12 வரை சம்பளமாக தயாரிப்பு தரப்பில் இருந்து வாங்குகிறார்களாம். ஆக உதவியாளர்களுக்கான மொத்த செலவு ஒரு நாளைக்கு மட்டும் 70,000 முதல் 80,000 வரை ஆகிறதாம். எனவே ஒரு படத்தில் தொடர்ந்து 50 நாட்கள் பணிபுரிந்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு செலவாகும் என சற்று யோசித்து பாருங்கள்.