1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 29 பிப்ரவரி 2020 (12:00 IST)

நயன்தாராவ சைட் அடிச்ச ஆளுடா நானு.. என்ன போய் கும்பிட வச்சிடியே - ரசிகர்கள் புலம்பல்!

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த ’மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ஆர்ஜே பாலாஜி அதிகாரபூர்வமாக அறிவித்தார்
 
இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7:00 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து கையில் வேலுடன் இருக்கும் நயன்தாராவின் பத்தி மயமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இதனை கண்ட நயன்தாராவின் ரசிகர்கள் "தலைவியை வெறிக்க வெறிக்க சைட் அடிச்ச ஆளுடா நானு என்ன போய் இப்படி கும்பிட வச்சுட்டியே என கூறி கமெண்ட்ஸ் செய்து புலம்பி வருகின்றனர். பேவரைட் ஹீரோக்களின் காதலியாக,  அழகு பதுமையாக நயனை பார்த்து ரசித்த ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்திற்கு பிறகு கூப்பிடு போட்டு தலைவிக்கு தனி மரியாதை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.