1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. young heroine angry with director

இளம் இயக்குநர் மீது கடுப்பில் இருக்கும் நடிகை

kisu kisu
பிரமாண்ட படத்தில் இருந்து விலக இளம் இயக்குநர் தான் காரணம் என்பதால், அவர்மீது கடுப்பில் இருக்கிறாராம் நடிகை.


 

கோடிகளைக் குவித்த பிரமாண்ட சரித்திரப் படத்தைப் பார்த்து, தானும் அதேபோல் ஒரு படத்தை எடுக்க விரும்பினார் பூ நடிகையின் கணவர். பாம்புக்குப் பால் வார்த்த நிறுவனம், 300 கோடியில் தயாரிக்க ஓகே சொன்னது. அந்தா… இந்தாவென்று கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் கூட செய்து விட்டார்கள். ஆனால், அடுத்தகட்டத்துக்கு படம் எப்போது நகரும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

காரணம், இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிறுவனம்தான், இளைய தளபதியை வைத்து இளம் இயக்குநர் எடுக்கும் படத்தையும் தயாரிக்கிறது. ஆனால், போட்ட பட்ஜெட்டைவிட எக்கச்சக்கமாக பில் வந்துவிட்டதாம். இதில், சென்னையில் வேறு ஒரு ஷெட்யூல் பாக்கியிருக்கிறது. எனவே, பிரமாண்ட படத்துக்கு வைத்திருந்த காசைத்தூக்கி தளபதி படத்தில் போட்டுவிட்டார்களாம்.

இதனால், பிரமாண்ட படம் எப்போது தொடங்கும் என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. எனவேதான், கால்ஷீட்டை வீணாக்க வேண்டாமென படத்தில் இருந்து விலகினாராம் நடிகை. இதற்காக, பயிற்சியாளரை வைத்து வாள் சண்டையெல்லாம் கற்றவரல்லவா? அவர் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கத்தானே செய்யும்?
 
About Writer
cauveri manickam
அடுத்த கட்டுரையில்
காதல் வதந்தியை தாங்க முடியாமல் வழக்கு தொடர உள்ள அனுஷ்கா!