செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: ஞாயிறு, 4 ஜூன் 2017 (13:08 IST)

காதல் வதந்தியை தாங்க முடியாமல் வழக்கு தொடர உள்ள அனுஷ்கா!

காதல் வதந்தியை தாங்க முடியாமல் வழக்கு தொடர உள்ள அனுஷ்கா!

சினிமா பிரபலங்கள் என்றால் வதந்திகள் கொஞ்சம் அதிகமாகவே பரவும். அதுவும் காதல் விவகாரம் என்றால் வதந்தி றெக்கை கட்டி பறக்கும். அப்படி சமீபத்தில் பரவிய ஒரு வதந்தி தான் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் என்ற வதந்தி.


 
 
அதிலும் தெலுங்கு திரையுலகில் இந்த வதந்தி றெக்கை கட்டி பறந்தது. இந்த கிசுகிசுவை பரபரப்புவது யார் என விசாரிக்க ஆரம்பிதத்தில் அனுஷ்காவுக்கு ஷாக்கிங் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. தன்னுடன் இருப்பவர்கள் தான் இந்த வதந்தியை பரப்பியதாக அனுஷ்கா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதனையடுத்து இந்த வதந்தி தொடர்பாக தனது உதவியாளர் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ள அனுஷ்கா, தொடர்ந்து எனக்கும் பிரபாஸுக்கும் இடையே காதல் என வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என அவர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.