1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:55 IST)

தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டாராக நினைக்கும் சமந்தா… அதுக்கு ஹிட் கொடுக்கணுமே!

தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா நயன்தாரா போல அதிகமாக சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்கள் அவரிடம் செல்லவே தயங்குகிறார்களாம்.

தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது மட்டுமல்லாமல் தானே முன்னணி கதாநாயகியாக நடித்தும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். விஜயசாந்திக்குப் பின்னர் இதுபோல கதாநாயகிகள் தனியே நடித்து இவ்வளவு வெற்றி பெற்றதில்லை. அதனால் அவரது சம்பளமும் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் நயன்தாரா போல வெற்றி படம் கொடுக்க வேண்டும் என நினைக்காமல் சம்பளம் மட்டும் வாங்கவேண்டும் என நினைக்கிறாராம். அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த யுடர்ன் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் 3.5 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்கள் அவரிடம் கதை சொல்ல செல்லவே தயங்குகிறார்களாம்.