‘நேர் கொண்ட பார்வை’ நடிகை 5 மாத கர்ப்பம்!

sivalingam| Last Modified ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (20:28 IST)
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ’காலம்’ என்ற பாடலில் அட்டகாசமான டான்ஸ் ஆடிய நடிகை கல்கி கோச்சலின் தற்போது 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது


கல்கி கோச்சலின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். கல்கி கோச்சலினும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை வாட்டர் பாத் மூலம் பிரசவிக்க விரும்புவதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

கல்கி கோச்சலின் பிரசவத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே அவர் வெற்றிமாறன், கவுதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்கி கோச்சலின் வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :