திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (07:20 IST)

அஜித் படத்தை சிறப்புக்காட்சி பார்க்க சென்ற ரசிகர் எரித்து கொலை

அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்ற அஜித் ரசிகர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருச்சி அருகே செங்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர் தமிழழகன். இவர் கடந்த 7ஆம் தேதி அதிகாலை 'நேர்கொண்ட பார்வை' படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்று உள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து தனது மகனை காணவில்லை என்று அவருடைய தந்தை சண்முகநாதன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் தமிழழகனை தேடிவந்தனர்
 
இதனையடுத்து போலீசார் இரண்டு நாட்கள் கழித்து தமிழழகனின் வாகனத்தை கண்டுபிடித்தனர். மேலும் அவரது செல்போனை தொடர்ச்சியாக தொடர்பு கொண்டிருந்த போது கார்த்திக் என்ற நபர் பதிலளித்தார். அவரை கண்டுபிடித்து விசாரணை செய்தபோது  அஜித் படம் பார்க்க சென்ற தமிழழகனை அவருடைய பழைய நண்பர்கள் 3 பேர் சந்தித்ததாகவும், பின்னர் நீண்ட நாள் கழித்து சநதித்ததால் மது அருந்தியதாகவும், அப்போது பெண் விவகாரம் குறித்து நால்வருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து நண்பர்கள் மூவரும் தமிழழகனை அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை அருகில் உள்ள சுடுகாட்டில் தீ வைத்து எரித்து சாம்பலாக்கி விட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து தமிழழகனை கொலை செய்த மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.