1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. national award actor feeling to divorce issue

விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகர்

கோலிவுட் நடிகர்
தேசிய விருதுபெற்ற கோலிவுட் நடிகர், விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார்.



 


குறும்படங்களில் நடித்து, வில்லனாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக நடித்தவர் இந்த நடிகர். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். ஹீரோவாக எடுபடாததால், மறுபடியும் வில்லனாக நடித்து வருகிறார். இவருக்கும், ஒரு ஹீரோயினுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கைக்குழந்தை இருக்கும் இவர்களுக்கு விவாகரத்து ஆகப்போகிறது என்று செய்தி வெளியானது.

இதனால், தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், நிறைய பேர் போன் செய்து கேட்பதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார் நடிகர். ‘என்னைப் பற்றி செய்திகளை நேரடியாக என்னிடம் கேட்டுவிட்டு போடுங்கள்’என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நடிகை குஷ்பூ அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி