செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2017 (17:38 IST)

நடிகை குஷ்பூ அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

நடிகை குஷ்பூ வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. 

 
பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ கால் தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்தார். மேலும் இவருக்கு அடிக்கடி வயிறு வலியும் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து வயிற்றில் ஏற்பட்டுள்ள சிறு  கட்டியை அகற்ற ஆபரேசனுக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் குஷ்பூவுக்கு வயிற்று வலி அதிகமாகி மருத்துவரிடம் சென்ரபோது அவருக்கு வயிற்றில்கட்டி இருப்பதாகவும், அதனை உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால் தற்போது குஷ்பூ தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக அவருடைய  மேலாளர் தெரிவித்துள்ளார். ஆபரேசன் முடிந்ததும் ஓய்வு தேவை என்பதால், குஷ்பூ கலந்துகொள்ளவிருந்த முக்கிய  நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.