1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (05:33 IST)

விவாகரத்து ஆன பெற்றோரை மீண்டும் இணைத்து வைத்த மகன்

இங்கிலாந்து நாட்டில் விவாகரத்து ஆன தந்தையையும் தாயையும் அவர்களுடைய மகன் ஒன்று சேர்த்ததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.



 
 
அனிட்டி வென்ஸ்லே மற்றும் டன்கேன் கிரே ஆகியோர் கடந்த 1981ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஸ்டார்ட் என்ற மகன் பிறந்தார். ஒருசில மாதங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர் ஒருவர் இன்னொருவரை பற்றி அக்கறை கொள்ளவில்லை
 
இந்த நிலையில் 28 வருடங்கள் கழித்து ஸ்டார்ட் தனது தாயாரிடம் தந்தையுடன் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று விருப்பம் தெரிவிக்க மகனின் ஆசையை பூர்த்தி செய்ய விவாகரத்து பெற்ற கணவருடன் மீண்டும் வாழ ஒப்புக்கொண்டார். இருவரையும் மீண்டும் இணைத்த மகன், இருவரது மறுமணத்தை தானே முன்னின்று நடத்தி வைத்தார். மகனின் விருப்பத்திற்கு இணங்க மீண்டும் இல்வாழ்க்கையில் இணைந்த பெற்றோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.