1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (22:16 IST)

ரஜினி மகளிடம் இருந்து விடுதலை பெற்ற இளம் தொழிலதிபர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யா மற்றும் இளம் தொழிலதிபர் அஸ்வின் ஆகியோர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்



 
 
இந்த நிலையில் செளந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் சட்டரீதியாம பிரிய முடிவு செய்து விவாகரத்து மனுவை தாக்கல் செய்தனர். பரஸ்பரம் விவாகரத்து என்பதால் சட்டப்படி ஆறு மாதங்கள் பிரிந்திருந்த இவர்கள் கடந்த மாதம் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. சட்டப்படி விவாகரத்து வழங்குவதாக தீர்ப்பு அளித்ததை அடுத்து இருவரும் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் விடுதலை பெற்றனர்.