1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (17:05 IST)

கண்ணீரில் தத்தளித்த ‘தல’ நடிகர்

பல்கேரியாவில் ஷூட்டிங்கில் இருக்கிறார் ‘தல’ நடிகர். கருமமே கண்ணாக இருந்தாலும், தினம்தோறும் வீடியோ காலில்  வீட்டில் உள்ளவர்களுடன் பேசிவிடுவார். ஆனால், நேற்று ரொம்பவே ஒதுக்குப்புறமான இடத்தில் ஷூட்டிங் என்பதால், செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை.

 
இத்தனைக்கும், நேற்று அவருடைய திருமண நாள். உலகெங்கும் உள்ள அவருடைய ரசிகர்கள் வாழ்த்த, அவர்களோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாமல் தவித்திருக்கின்றனர். ஒருவழியாக, நள்ளிரவு (இந்திய நேரப்படி) ஷூட்டிங் முடிந்து அறைக்குத் திரும்பியதும், காதல் மனைவிக்குப் போன் செய்திருக்கிறார். இருவரும் கொஞ்ச நேரம் பேச முடியாமல்  ஆனந்தக் கண்ணீரில் தத்தளித்திருக்கிறார்கள்.