1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (15:57 IST)

இனிமேல் அப்படி நடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறும் சிங் நடிகை!

தமிழில் மூன்று படங்களில் நடித்த சிங் நடிகைக்கு எந்த படமும் கைகொடுக்காததால், தெலுகிற்கு சென்ற அவர், போன வேகத்திலேயே ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாகிவிட்டார். அதோடு மீண்டும் தமிழுக்கு வந்திருப்பவர், இந்தி படங்களிலும் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

 
சில கமர்சியல் டைரக்டர்கள், சிங் நடிகையை படுகவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க சொன்னார்களாம். அதற்கு சிங் நடிகை  சில படங்களில் கிளாமராக நடித்தது உண்மைதான். எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக அப்படி  நடித்தேன். இப்போது முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்துவிட்டேன்.
 
அதனால் இனிமேல் உடம்பை காட்டி நடித்து தான் இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலை இல்லை.  அதனால் பர்பாமென்ஸ் நடிகையாகப்போகிறேன். படங்களை தேர்வு செய்து நடிப்பதோடு, பணத்திற்கு ஆசைப்பட்டு கவர்ச்சி கதாநாயகி பட்டியலில் ஒருபோதும் நான் சேரமாட்டேன் என்று சிங் நடிகை கூறிவிட்டாராம்.