1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (18:32 IST)

பாதிக்குப் பாதி… பட்ஜெட்டைக் குறைத்த பட நிறுவனம்

பாதிக்குப் பாதி… பட்ஜெட்டைக் குறைத்த பட நிறுவனம்
ஏற்கெனவே பேசப்பட்ட பட்ஜெட்டில் பாதியை குறைத்துக் கொள்ளும்படி கூறியதால், அதிர்ச்சியில் உள்ளார் இயக்குநர்.

 
பிரமாண்ட படத்தைப் போலவே தானும் ஒரு சரித்திரக்கதையை இயக்கத் தயாரானார் பூ நடிகையின் கணவர். விலங்குகளை  வைத்துப் படமெடுத்து பணம் சம்பாதித்த நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்டது. 300 கோடி, 400 கோடி என்று  பல நாட்களாக பேசிக்கொண்டு இருந்தார்களே தவிர, படம் தொடங்குவதற்கான ஒரு வழியையும் காணோம்.
 
ஒருவழியாக, வெளிநாட்டில் நடந்த திரைப்பட விழாவில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். ஆனால், அதன்பிறகு கூட  படத்துக்கான வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. விசாரித்தால், பைனான்ஸ் பிரச்சனை என்கிறார்கள். கேட்ட இடத்தில்  பணம் கிடைக்காதது ஒரு பக்கம், இன்னொரு படத்தின் இயக்குநர் இஷ்டத்துக்கு செலவு செய்வது ஒரு பக்கம் என்று காசு  இல்லாமல் தவிக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். எனவே, பட்ஜெட்டை பாதியாகக் குறைத்துக் கொண்டு, இரண்டு பாகங்களுக்குப்  பதிலாக ஒரு பாகத்தை மட்டுமாவது எடுக்கலாமா என்று இயக்குநரிடம் ஆலோசித்து வருகிறதாம்.