ஷூட்டிங்கில் ‘பிட்டு’ படத்தின் இரண்டாம் பாகம்?
‘பிட்டு’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
பிரகாசமான இசையமைப்பாளர் ஹீரோவாக நடித்த ‘பிட்டு’ படம். விமர்சன ரீதியாக கழுவி ஊற்றப்பட்டாலும், வசூல் ரீதியாக நல்ல மழைதான். இந்தப் படத்தின் இயக்குநர், அடுத்ததாக வம்பு நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படம் மகா மட்டம் என்பதால், மீண்டும் பிரகாச இசையமைப்பாளரைத் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, ‘பிட்டு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்படி, சில நாட்களுக்கு முன்பே ஊட்டியில் ஷூட்டிங் தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே சொன்னால் எதிர்ப்பு வரலாம் என்பதால், அடக்கி வாசிக்க நினைக்கிறார்களாம்.