வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (14:22 IST)

சிம்புவின் புதிய கெட்டப்- எந்த படத்திற்கு தெரியுமா?

நடிகர் சிம்பு வித்தியாசமான புதிய சிகை அலங்காரம் செய்துள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
நடிகர் சிம்பு சமீபத்தில் டிவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறினார். எனவே, அதற்கு பின் தன்னுடைய புதிய பட அறிவிப்புகள் குறித்து அவர் எங்கேயும் தெரிவிக்கவில்லை.
 
ஆனால், அவர் ஒரு ஆங்கில படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல், இயக்குனர் மணிரத்னம் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தது. 
 
இந்நிலையில், நடிகர் சிம்புவின் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மொஹாக் ஹேர்கட் என அழைக்கப்படும் அந்த தோற்றத்தில் அவர் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறார்.
 
தான் நடிக்கவுள்ள ஆங்கில படத்திற்காகத்தான் அவர் தனது கெட்டப்பை இப்படி மாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் தொடங்குகிறது. அதேபோல், மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.