1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: வியாழன், 18 மே 2017 (22:34 IST)

விஷாலை எதிர்க்க ஒன்று சேரும் அஜித்-விஜய்

இதுவரை நடிகர் சங்கமாக இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கமாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்த அஜித், விஜய் தற்போது தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளதால் விஷாலை எதிர்க்க இருவரும் ஒன்றுசேரவுள்ளதாக கோலிவுட்டில் ஒரு கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது.



 


விஷாலின் வேலைநிறுத்த திட்டம் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக ஒரு அதிரடி அறிவிப்பை விஷால் அறிவிக்கவுள்ளாராம். அதன்படி இனிமேல் பெரிய நடிகராக இருந்தாலும் சின்ன நடிகராக இருந்தாலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகும்போது அவர்களது சம்பளத்தில் 10%தான் அட்வாஸ் தொகையை தயாரிப்பாளர்கள் தருவார்களாம்.

மீதி தொகையை மொத்தமாக படம்  வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்னர் தருவார்கள் என்றும் இதற்கு பெரிய நடிகர்களான ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் உள்பட அனைத்து நடிகர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் விஷால் கூறுகிறாராம். இதனால் பெரிய அளவில் அட்வான்ஸ் தொகை தயாரிப்பாளர்களுக்கு மிஞ்சும் என்றும், அதனால் வட்டித்தொகையும் மிச்சமாகும் என்பதும் அவருடைய ஐடியாவாம். ஆனால் சம்பளத்தில் பாதி தொகையை அட்வான்ஸ் ஆக  வாங்கி கொண்டிருக்கும் அஜித், விஜய், இந்த திட்டத்தை எதிர்க்க ஒன்றுசேர உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.