திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (10:41 IST)

பிதாமகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை

விக்ரம் ‘பிதாமகன்’ படத்தில் மயானத்தில் வேலை செய்பவராக நடித்திருப்பார். அதேபோல் நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெயர் ‘ஆறடி’. இப்படத்தின் இயக்குநர் ஜே.சந்தோஷ்குமார்.

 
இப்படம் பற்றி இயக்குனர் ஜே.சந்தோஷ்குமார் கூறுகையில்,’இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறையிலும் சாதனை படைத்து வருகிறார்கள். அவர்கள் இதுவரை செய்யாத வேலை மயான ஊழியர் வேலைதான். அந்த துறையில் ஒரு பெண்  ஈடுபட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அது எதனால் நடந்தது என்பதை பற்றி கூறும் படம்தான் இது.
 
படத்தில் விஜய்ராஜ், தீபிகா, டாம்பிரான்கோ, ஜீவிதா நடிக்கின்றனர். படத்திற்கு அபிஜோஜோ இசையமைத்து வருகிறார். படத்தை நவீன்குமார். சுமதி, மோகனவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.