ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட்டம் போடும் தகதக நடிகை
வாய்ப்புகள் இல்லாததால், ஒரு பாட்டுக்கு ஆடி சம்பாதிக்கலாம் என நினைக்கிறாராம் தகதக நடிகை.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஒரு பாட்டுக்கும் ஆடி சம்பாதித்துக் கொள்வார்கள். ஆனால், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் அப்படி கிடையாது. வாய்ப்புகள் இல்லையென்றால் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதிப்பார்கள்.
தகதக நடிகையும் இப்போது வாய்ப்பில்லாமல்தான் இருக்கிறார். பிரமாண்ட படத்துக்குப் பிறகு தன்னைத்தேடி வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு, எவருமே எட்டிப் பார்க்காததில் ஏக வருத்தமாம். எனவே, ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். அதற்காக கோடிகளில் சம்பளமும் வாங்கியுள்ளார்.