வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2017 (17:54 IST)

ஆப்பு மேல் ஆப்பு வைக்கும் விஷால்

பெப்சி அமைப்புக்கு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால்.


 

 
பெப்சி அமைப்புக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்குமான பிரச்னை இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது. ‘யாருடன் வேண்டுமானாலும் பணியாற்றலாம்’ என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது பெப்சி. இதனால், ரஜினியின் ‘காலா’ உள்பட பல படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார் தலைவர் விஷால். ஆனால், அதற்குப் பதிலாக வேறொரு நிபந்தனையை விதித்துள்ளார்.
 
அதாவது, தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களின் படங்களில் மட்டுமே பெப்சி பணியாற்ற வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார். கில்டு, ஃபிலிம் சேம்பரில் மட்டும் உறுப்பினர்களாக இருப்பவர்களின் படங்களில் பணியாற்றக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம், கில்டு மற்றும் ஃபிலிம் சேம்பர் அமைப்புகளை பலவீனப்படுத்தி, தயாரிப்பாளர் சங்கத்தை பலம் வாய்ந்த அமைப்பாக மாற்றத் திட்டமிட்டுள்ளார் விஷால்.