செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (18:41 IST)

தளபதி படத்தின் டீஸர் தள்ளிப்போவது ஏன்?

தளபதி படத்தின் டீஸர் தள்ளிப் போவதற்கான காரணம் தெரிந்துள்ளது.


 
 
தளபதி நடித்துள்ள படம், அடுத்த மாதம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தின் டீஸரைக் கூட இன்னும் வெளியிடவில்லை. 
 
இப்போது டீஸரை வெளியிட்டால்தானே, அப்புறம் டிரெய்லரை வெளியிட முடியும்? இதற்கிடையில் தல நடிகர் படத்தின் டீஸர், டிரெய்லர் சாதனையை வேறு முறியடிக்க வேண்டும்?
 
ஆனால், விஷயமே வேறாம். படத்தின் இயக்குநர் இதற்கு முன் இயக்கிய இரண்டு படங்களுமே, பழைய படங்களின் காப்பி என விமர்சிக்கப்பட்டது. இந்தப் படமும் அப்படித்தான் இருக்கிறதாம். 
 
இப்போதே டீஸரை வெளியிட்டால் அதைக் கண்டுபிடித்து, கழுவி ஊற்றுவார்கள் என்பதால், டீஸரைத் தாமதமாக வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.