வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2022 (10:32 IST)

நான் சாகல... இப்போ இதான் பண்ணிட்டு இருக்கேன் - நடிகை லட்சுமி வேதனை!

தான் இறந்துவிட்டதாக வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை லட்சுமி!
 
பழம் பெரும் நடிகையான லட்சுமி பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா. லட்சிமி மிகச்சிறந்த நடிகையாக பல்வேறு விருதுகளை அள்ளியுள்ளார். 
 
இந்நிலையில் இவர் நேற்று இறந்துவிட்டதாக வதந்தி செய்திகள் பரவியது. ஆனால், உண்மையில் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயிலில் உள்ள லட்சுமி என்ற யானை இறந்துவிட்டது. இதனை நடிகை லட்சுமி இறந்துவிட்டதாக தவறாக பலர் புரிந்துகொண்டு அவருக்கு போன் செய்து விசாரித்தனர். 
 
இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள நடிகை லட்சுமி, காலையில் இருந்து நிறைய பேர் எனக்கு போன் செய்து பேசிட்டு வருகிறார். எனக்கு பிறந்தநாள் கூட இல்லையே ஏன் எல்லோரும் கால் பண்றீங்க என்று நான் கேட்ட போது தான் நீங்கள் இருந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது என்றார்கள்.
 
உண்மையில் நான் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கிறேன். பலரும் அக்கறையோடு கேட்டது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. நான் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக ஷாப்பிங் செய்து வருகிறேன் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.