1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (17:32 IST)

மாமா குட்டியுடன் குத்தாட்டம் போட்ட நிக்கிதா - வீடியோ!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலக அளவில் திரையரங்கு மூலமாகவே 70 கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. 
 
இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது. இதில் ஹீரோயினாக இவானா நடித்து புகழ் பெற்றார்.
 
இதன் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நிக்கிதா, ரெவி, மாமாகுட்டி மூவரும் சேர்ந்து ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.