வில்லனாக மாறினார் வம்பு நடிகர்!

VM| Last Updated: செவ்வாய், 12 மார்ச் 2019 (11:26 IST)
காதலிகளுக்கு  அம்பு விடுவதில் வல்லவன், கெட்டவர்களை வம்பிலுப்பதில் கெட்டவன். குரல் கொடுப்பதில் தமிழன். அவரை வம்பிலுத்து சிலர் வாயை வாடகைக்கு எடுத்துவிட்டதால், பல சர்ச்சையில் வம்பாக சிக்கினார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான  'ராசா' படம் பெரிசாக போகவில்லை. இதனால்  அவர் சோர்ந்து போகவில்லை.   அடுத்து  அவரை வில்லனாக நடிக்க வைக்க ஒரு படக்குழு அணுகியது.  
இதனை சந்தோகமாக வம்பு நடிகர் ஏற்றுக்கொண்டாராம். செய்தி நிறுவனம் ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடவுள் நடிகருடன் அவர் மோதப்போகிறாராம்.  மோதி பார்ப்பதில் அவர் வல்லவர், எனவே நிச்சயம் நெகட்டிவ் ரோலாக இருந்தாலும் மாஸாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் தன்னுடைய முன்னாள் காதலியின் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷுட்ங்கில் பிஸியாக இருக்கிறாராம். 


இதில் மேலும் படிக்கவும் :