ரஜினியின் '2.0: ஷங்கர் - லைகா திடீர் மோதலா?
ஷங்கர் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றால் அந்த தயாரிப்பாளரின் கோவணம்கூட மிஞ்சாது என்று கோலிவுட்டில் கூறுவதுண்டு. 'ஐ' படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இப்போது எங்கே இருக்கின்றார் என்றே தெரியாத நிலைதான் உள்ளது. இந்நிலையில் ஷங்கர் தற்போது சுமார் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் '2.0' படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனத்திற்கு இந்த பட்ஜெட் ஒரே ஒரு நாள் வருமானம் என்றாலும் இந்த படத்தை உலகம் முழுவதும் தீபாவளி அன்று வெளியிட்டு வசூலை அள்ள முடிவு செய்திருந்தனர்.
ஷங்கரும் அதற்கு ஒப்புக்கொண்டு பணிகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது '2.0' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக தரத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆகி வருவதே இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக காரணம் என கூறப்படுகிறது. இந்தவிஷயத்தில் ஷங்கர் மீது லைகாவுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.