1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ramayana movie collection for 12 days

ரூ.1500 கோடி வசூலை நெருங்கிய ராமாயணா! - 2 ஆயிரம் கோடி அடிக்குமா?...

ramayana
இந்தியாவில் ராமாயண கதைக்கு எப்போதும் ஒரு மவுசு உண்டு. அது புனைக்கதை, கற்பனை கதை என சிலர் வாதிட்டாலும் ராமாயணம் டிவி தொடராகவோ, திரைப்படமாகவோ எடுக்கப்பட்டால் பலரும் சென்று சென்று ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

அதனால்தான் தொடர்ந்து ராமாயண கதைகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி ஆகியோர் நடித்து உருவான ராமாயணா திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 5ம் தேதி உலகமெங்கும் பல மொழிகளிலும் வெளியானது..

இந்நிலையில், படம் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ராமாயணா திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.1437 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.947 கோடி வசூல் செய்துள்ளதாம். விரைவில் ரூ.1500 கோடி வசூலை தாண்டி விடும் என்பதால் இந்த திரைப்படம் ரூ.2 ஆயிரம் கோடி வசூலை தொடுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நடிகை தமன்னா படத்தின் இரண்டாம் பாகம்.. பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்...