செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 மே 2019 (14:25 IST)

’டியர் ஆல் லவ் யூ - வாட்ஸ் அப்பில் ’ ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்த வாலிபர் மன்சூர்.  இவர் தனது வீட்டருகில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.
மன்சூருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் வழக்கம் போல வேலைக்குச் சென்றுவிட்டி இரவில் வீட்டுக்குத் திரும்பியவர் தன் அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.
 
பின்னர் காலையில் வெகுநேரமாகியும் மன்சூர் கதவைத் திறக்காத நிலையில், உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பர்த்தனர். அப்போது மன்சூர் தந்து அம்மாவின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
 
இதுபற்றி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மன்சூரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் மன்சூர் தான் இறப்பதற்கு முன் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக: 'என்ன வாழ்க்கடா இது! காசு இல்லைனா யாரும் மதிக்க மாட்டிராங்க  சோ இந்த லைஃபுக்கு ஒரு குட்பை .. டியர் ஆல் லவ்யூ சோ மச் ’ என்று இருந்ததாகத் தெரிகிறது.
 
திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் மன்சூர் தற்கொஅலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.