வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (13:09 IST)

இவ்வளவு கம்மியா 5ஜி ஸ்மார்ட்ஃபோனா? – கலக்கும் Lava Blaze 1X 5G!

Lava Blaze 1X 5G
இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் லாவா நிறுவனம் தனது புதிய Lava Blaze 1X 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளத்து.

இந்தியாவில் பல வெளிநாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு இணையாக பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களை உள்நாட்டு நிறுவனமான லாவா வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் 5ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், குறைந்த விலையில் பல சிறப்பம்சங்களுடன் Lava Blaze 1X 5G என்ற புதிய மாடலை லாவா அறிமுகம் செய்துள்ளது.

Lava Blaze 1X 5G price


Lava Blaze 1X 5G சிறப்பம்சங்கள்:
 
  • மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட், ஆக்டா கோர் ப்ராசஸர்
  • 6.5 இன்ச் கர்வ்ட் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்டு 12
  • 50 எம்.பி + 2 எம்பி + விஜிஏ ட்ரிப்பிள் பேக் கேமரா
  • 8 எம்.பி முன்பக்க செல்பி கேமரா, ஸ்க்ரீன் ப்ளாஷ் உடன்
  • 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி + 1 டிபி வரை நீடிக்கக்கூடிய மெமரி ஸ்லாட்
  • 5000 mAh பேட்டரி, 15W பாஸ்ட் சார்ஜிங்
  • ஃபேஸ் அன்லாக், ஃபிங்கர் ப்ரிண்ட் அன்லாக்

இந்த Lava Blaze 1X 5G ஸ்மார்ட்போன் க்ளாஸ் க்ரீன், க்ளாஸ் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. 6ஜிபி+128ஜிபி மாடலின் விலை ரூ.11,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.