செவ்வாய், 6 ஜூன் 2023
 1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 21 மார்ச் 2023 (15:57 IST)

அறிமுக சலுகையாக அதிரடி விலைக்குறைப்பு..! – POCO X5 அதிரடி சிறப்பம்சங்களுடன்!

Poco X5
பிரபலமான போக்கோ நிறுவனத்தின் POCO X5 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ள நிலையில் விலையில் அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பட்ஜெட் விலை பல சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் போக்கோ, தற்போது POCO X5 என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

POCO X5 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 • 120Hz சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் சிபியு, அட்ரினோ 619
 • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 5G,
 • ஆண்ட்ராய்ட் 12, MIUI 13
 • 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி இண்டர்னெல் மெமரி
 • 13 எம்.பி வைட் ஆங்கிள் முன்பக்க கேமரா
 • 48 எம்.பி வைட் ஆங்கிள், 8 எம்.பி அல்ட்ரா வைட், 2 எம்.பி மேக்ரோ ட்ரிபிள் கேமரா
 • சைடு ஃபிங்கர்ப்ரிண்ட், வைஃபை, யுஎஸ்பி டைப் சி,
 • 5000 mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்,

இந்த POCO X5 5G ஸ்மார்ட்போன் ஜாகுவார் ப்ளாக், வைல்ட்கேட் ப்ளூ, சூப்பர்நோவா க்ரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

இன்று (மார்ச் 21) அறிமுகமாகும் இந்த POCO X5 5G ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக ரூ.16,999க்கு ப்ளிப்கார்ட் தளத்திள் விற்பனையாகிறது.

Edit by Prasanth.K