1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2023 (09:04 IST)

அசத்தலான கேமரா.. அதிகமான இண்டெர்னல் மெமரி! – Vivo X90S சிறப்பம்சங்கள்!

Vivo X90S
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தனது புதிய Vivo X90S ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.



உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள விவோ நிறுவனம் தனது புதிய Vivo X90S ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக உள்ள இந்த Vivo X90S ஸ்மார்ட்போன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

Vivo X90S ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • 120 Hz ரெப்ரெஷ் ரேட், 2160 Hz High Frequency
  • டைமென்சிட்டி 9200+ சிப்செட்
  • இம்மார்டலிஸ் G715 ஜிபியு
  • ஆண்ட்ராய்டு 13, ஆரிஜின் ஓஎஸ் 3.0
  • 50 எம்.பி IMX866 சோனி + 12 எம்.பி அல்ட்ரா வைட் + 12 எம்.பி ஆப்டிகல் ஸூம் ட்ரிப்பிள் கேமரா
  • 32 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 8 ஜிபி / 12 ஜிபி ரேம்
  • 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 4810 mAh பேட்டரி

Vivo X90S


இந்த Vivo X90S ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ள விலையோடு இந்திய ரூபாயை ஒப்பிட்டால் ஆரம்ப கட்ட மாடலின் விலை ரூ.45,000 தொடங்கி அதிக இண்டெர்னல் மெமரி மற்றும் ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.54,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K