வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (13:41 IST)

முதல் முறையாக கலர் மாறும் Back Case! இன்னும் பல..! – கவனம் ஈர்க்கும் itel S23!

itel S23
இந்தியாவிலேயே முதல்முறையாக விதவிதமான கலர்களில் மாறும் Back Case கொண்ட விலை குறைவான itel S23 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது ஐட்டெல் நிறுவனம்.



இந்தியா முழுவதும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சக்கை போடு போட்டாலும், 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கான மவுசும் குறைந்தபாடில்லை. குறைந்த விலையில் நிறைவான சிறப்பம்சங்களுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றன.

அந்த வகையில் தற்போது ஐட்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள 4ஜி ஸ்மார்ட்போனான itel S23 தற்போது வரவேற்பை பெற்று வருகிறது. முக்கிய சிறப்பம்சமாக பல்வேறு நிறங்களில் மாறக் கூடிய Back Case ஐ இது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

itel S23


itel S23 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
  • 6.6 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரெஷ் ரேட்
  • யுனிசாக் T606 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 12
  • 50 எம்.பி + க்யூ விஜிஏ டூவல் ப்ரைமரி கேமரா
  • 8 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி, 512 ஜிபி வரை சப்போர்ட் செய்யக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட்
  • 5000 mAh பேட்டரி, 10W பாஸ்ட் சார்ஜிங்,
itel S23


இந்த itel S23 ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக், பிங்கர் சென்சார் ஆகியவையும் உள்ளது. itel S23 ஸ்மார்ட்போன் ஸ்டார்ரி ப்ளாக் மற்றும் மிஸ்டரி வொயிட் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கின்றன.

மார்ச் 14 அன்று வெளியான இந்த itel S23 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,799 மட்டுமே. ரூ.10 ஆயிரத்திற்கு அதிகமான சிறப்பம்சங்களை கொண்டு வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் itel S23 ஸ்மார்ட்போனும் ஒன்று.

Edit by Prasanth.K